வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 24 செப்டம்பர், 2012

படகு மூலம் ஆஸி. க்கு வருபவர்கள் தமது குடும்பத்துடன் இணைந்து கொள்வதற்கான சலுகை நீக்கம்: அவுஸ்திரேலியா



டகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் தமது குடும்பத்தினருடன் இணைந்து கொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகை நீக்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான நிபுணர் குழுவொன்றின் சிபாரிசுகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு, குடியகல்வு அமைச்சர் கிறிஸ் போவென் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 13.08.2012 ஆம் திகதிக்கு பின்னர் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர்களுக்கு குடும்ப அங்கத்தவர்களுடன் மனிதாபிமானத் திட்டத்தின் கீழ் இணைந்து கொள்வதற்கு வாய்ப்பளிப்பதை தடுப்பதும் இச் சிபாரிசுகளில் அடங்கும். அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி ஆபத்தான படகு பயணம் மூலம் மக்கள் வருவதை அதைரியப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதுவரை அவுஸ்திரேலியாவிலுள்ள அகதிகளுடன் வெளிநாடுகளிலுள்ள வாழ்க்கைத் துணை, தங்கி வாழும் பிள்ளைகள், சில சந்தர்ப்பங்களில் பெற்றோர் ஆகியோர் இணைந்து கொள்வதற்கு விஸா வழங்கப்படக்கூடிய நிலை காணப்பட்டது. ஆனால் இந்நிலைமையானது குடும்பத் தலைவர் தனியாக அவுஸ்திரேலியாவுக்கு வந்து புகலிடத்திற்கு விண்ணப்பித்த பின்னர், மனிதாபிமான குடிவரவாளர்களாக குடும்ப அங்கத்தவர்கள் பலரை அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவரும் சூழலை ஏற்படுத்தியது. 13.08.2012 ஆம் திகதிக்கு முன்னர் படகு மூலம் வந்தவர்களின் விண்ணப்பங்கள் தொடர்பான தீர்மானமானது அவர்களின் சொந்த நாட்டில் அவர்கள் ௭திர்கொள்ளும் பாகுபாடுகள், வழக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். அத்துடன் புதிய மாற்றங்களானது வெளிநாடுகளிலிருந்து அகதி அந்தஸ்தும் மனிதாபிமான விஸாவும் பெற்று அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு உயர் முன்னுரிமை அளிப்பதையும் உறுதிப்படுத்தும் . பசுபிக் தீவு நாடான நவுறுவிற்கு இடமாற்றம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்த இலங்கையைச் சேர்ந்த 18 புகலிட கோரிக்கையாளர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரி படகு மூலம் கிறிஸ்மஸ்தீவிற்கு பயணிப்பவர்களை நவுறு நாட்டில் வைத்து பரிசீலனை செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்தது. இந்நிலையில் தம்மை நவுறு நாட்டிற்கு அனுப்பாமல் மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரிய இலங்கையர்கள் 18 பேர் நேற்று முன்தினம் சனிக்கிழமை கிறிஸ்மஸ் தீவிலிருந்து கொழும்புக்கு புறப்பட்டனர். படகு மூலம் வருபவர்களுக்கு விசேட மனிதாபிமானத் திட்டத்தின் கீழ் குடும்பங்கள் அனுசரணை வழங்குவதை தடுக்க வேண்டுமென ஹௌஸ்டன் சுயாதீனக் குழுவின் சிபாரிசுகளையும் விதிகளையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது. அவுஸ்திரேலியாவை அடைந்தவுடன் விஸா வழங்கப்படும் ௭ன மனிதக் கடத்தல்காரர்களால் இம்மக்கள் தவறாக நம்ப வைக்கப்படுகின்றனர். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’