வெ ள்ளவத்தையில் 01.01.2004ஆம் ஆண்டு தொடக்கம் 25.10.2004ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கருணா குழுவின் நால்வரை கொலை செய்ய முயன்றாரென குற்றம் சுமத்தி இருவர் மீது கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்துக்கு எதிராக இலங்கை இராணுவத்துக்கு உதவிய கருணா குழுவின் 4 அங்கத்தவர்களை கொல்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர், நியூட்டனுடன் சேர்ந்து சதி செய்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் கருணா குழுவைச் சேர்ந்த தங்கராஜா தப்பரமூர்த்தி, செங்குராஜா, நல்லையா குகராசா, இராசா இராசாவெலி ஆகியோரே கொலை செய்ய உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சாந்ததேவன், கோமகள், ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். இவர்களுக்கான சிரேஷ்ட வழக்குரைஞர் கே.வி.தவராசா, ரி.ஜனகனின் உதவியுடன் ஆஜராகின்றார். அடுத்த விசாரணை டிசெம்பர் 6ஆம் திகதி நடைபெறுமென அறியப்பட்டது. -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’