வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 26 செப்டம்பர், 2012

ராகலை கத்திக்குத்து சம்பவத்தில் தாய் பலி; மகள் காயம்; கொலையாளி சடலமாக மீட்பு



நுவரெலியா, ராகலை, அல்மா லியன்வல தோட்டப்பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவமொன்றில் 50 வயதான தாயொருவர் கொல்லப்பட்டதுடன் அவரது 30 வயது மகள் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் ராசமணி என்பவரே கொல்லப்பட்டவராவார். அவரது மகள் மஞ்சுளா காயங்களுக்கு உள்ளான நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, மேற்படி கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் அல்மா லியன்வல தோட்டத்திலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஐ பொரஸ்ட் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பத்மநாதன் (30 வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். இவரது மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? என்பது தொடர்பில் ராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று செவ்வாய்க்கிழமை 7 மணியளவில் ராசமணியின் வீட்டுக்குச் சென்றுள்ள பத்மநாதன், தனது மனைவிக்கு ஏற்பட்டுள்ள கள்ளத் தொடர்புக்கு ராசமணியின் மகள் மஞ்சுளாவே உதவி வருவதாகக் கூறி மஞ்சுளாவை கத்தியால் குத்தியுள்ளார். இதனைத் தடுக்கச் சென்ற ராசமணியும் கத்திக்குத்துக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தை அடுத்து பத்மநாதன் என்பவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் இன்று காலை ஐ பொரஸ்ட் பகுதியில் வைத்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ராகலை பொலிஸார் தெரிவித்தனர். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’