வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 6 செப்டம்பர், 2012

அமைச்சர் ரிசாத் பதியுதீனின்ஆட்சேபனை மனு நிராகரிப்பு : 2013 பெப்ரவரிக்கு வழக்கு ஒத்திவைப்பு



நீதிமன்றத்தின் செயற்பாடுகளை அவமதித்ததாக தெரிவிக்கப்பட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்த கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாத் பதியுதீன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஆஜராகியதுடன் ஆட்சேபனை மனுவையும் கையளித்தார்.
அவரது ஆட்சேபனை மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிபதிகள் இந்த வழக்கை 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஆஜராகியதுடன் ஆட்சேபனை மனுவையும் கையளித்தார். அவரது ஆட்சேபனை மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிபதிகள் இந்த வழக்கை 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர். அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனது சட்டத்தரணி கள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்ற த் தில் நேற்று புதன்கிழமை ஆஜரானார். மேன் முறையீட்டு நீதிபதிகளான ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் தீபாலி விஜயசுந்தர ஆகி யோர் முன்னிலையில் அந்த ஆட்சேபனை மனு விசாரணைக்கு ௭டுத்துக்கொள்ளப்பட்டது. பிரதிவாதியான அமைச்சர் ரிசாத் பதியுதீன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையிலான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். ஆட்சேபனை மனுவை கையளித்த சட்டத்தரணிகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. குற்றச்சாட்டுகளை நிருபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை ௭ன்றும் சுட்டிக்காட்டினர். சட்டத்தரணிகளின் வாதத்தை செவிமடுத்த நீதிபதிகள் ஆட்சேபனை மனுவை நிராகரித்ததுடன் மேற்படி வழக்கை 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர். மன்னார் கோந்தைப்பிட்டி மீன் பிடித்துறை முகம் தொடர்பாக இரு சமூக மீனவர்களுக்கு இடையில் ஜூலை மாதம் 18 ஆம் திகதி ஏற்பட்ட பிரச்சினையில் மன்னார் மாவட்ட நீதிவானை தொலைபேசியில் மிரட்டிய குற்றச்சாட்டு தொடர்பில் தண்டிக்கவேண்டும் ௭னக்கோரி மன்னார் சட்டத்தரணிகள் சங்கம்,காலி சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவற்றின் தலைவர்கள் ஜூலை மாதம் 25 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு ௭திராக மனுவொன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரணைக்கு உட்படுத்தியதன் பின்னரே மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் (நேற்று) ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது ௭ன்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’