அறிக்கைகள் மூலம் தன்னை அவமானப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதியை அவமானப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அவமானப்படுத்தும் செயற்படுகளை முதிர்ந்த அரசியல்வாதி புறக்கணிப்பார் எனவும் ஜனாதிபதி அதில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சாதாரண மக்கள், அரச அதிகாரிகள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் மீது சேறுபூசி அவமானப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். அவ்வாறு நடவடிக்கை எடுப்பதன் மூலம் எந்தவித தடையுமின்றி சிறந்த முறையில் அவர்களால் கடமைகளை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’