வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 15 ஆகஸ்ட், 2012

படகுஅகதிகளை நௌரு, பப்புவாநியூகினியாவில் தடுத்துவைக்கும் சட்டமூலத்திற்கு ஆஸி நாடாளுமன்றம் அங்கீகாரம்



புகலிடம் கோரி படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்களை பசுபிக் சமுத்திரத்தின் ஏனைய நாடுகளுக்கு இடமாற்றுவதற்கான சட்டத்தை அவுஸ்திரேலிய நாடாளுமன்ற கீழ்சபை இன்று நிறைவேற்றியுள்ளது. இதன்படி, படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் நௌரு மற்றும் பப்புவா நியூகினியா போன்ற நாடுகளில் அமைக்கப்படும் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு அவர்களின் புகலிடக் கோரிக்கை பரிசீலிக்கப்படும். நௌரு மற்றும் பப்புவா நியூகினியாவில் மக்கள் ஆய்வுக்குட்படுத்தப்படுவதை ஒரு மாதத்திற்குள் காண முடியும் என நம்புகிறோம் என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.
படகுமூலம் வரும் அகதிகள் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் மேற்படி பசுபிக் தீவுகளில் இரு வருடங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதால், தம்மை அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுசெல்வதற்காக மனிதக்கடத்தல்காரர்களுக்கு பணம் வழங்குவதற்குமுன் மக்கள் மக்கள் இருதடவை சிந்திப்பார்கள் என அவுஸ்திரேலிய அரசாங்கம் நம்புகிறது. வெளிநாடுகளில் வைத்து புகலிடக்கோரிக்கையாளர்களை விசாரிக்கும் முறைமையை தொழிற்கட்சி அரசாங்கம் 2007 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின் கைவிடப்பட்டிருந்தது. எனினும் அண்மைக்காலமாக படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து மீண்டும் இத்தகைய நடைமுறையை பின்பற்றுவதற்கான சட்டமொன்று அவசியம் என வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக அவுஸ்திரேலியாவின் அரசாங்கத்திற்கும் அரசாங்கத்தற்கும் இடையில் நீண்டகாலமாக இழுபறி நிலவியது. எனினும் இன்று சுமார் 6 மணித்தியால விவாதத்தின் பின்னர் இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’