வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 15 ஆகஸ்ட், 2012

முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு துரிதப்படுத்தப்படும்: புலம்பெயர் உணர்வாளர்களிடம் கோட்டாபய உறுதி



மு ன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு துரிதப்படுத்தப்படும்: புலம்பெயர் உணர்வாளர்களிடம் கோட்டாபய உறுதி புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுமென நெர்டோ அமைப்பின் செயலாளர் குமரன் பத்மநாதனின் (கேபி) ஏற்பாட்டில் இலங்கை வந்த புலம்பெயர் உணர்வாளர்களிடம் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
நெர்டோ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கை வந்த வெளிநாட்டு உணர்வாளர்களுடன் கடந்தவாரம் இடம்பெற்ற சந்திப்பிலேயே கோட்டாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்ததாக குமரன் பத்மநாதன் - தமிழ்மிரருக்கு பிரத்தியேகமாகத் தெரிவித்தார். குறித்த சந்திப்பு தொடர்பாக கேபி மேலும் கூறுகையில்... கனடா, லண்டன், அவுஸ்திரேலியா, சுவிற்சர்லாந்து, சுவீடன், பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 22 உணர்வாளர்கள் நெர்டோ அமைப்பின் ஏற்பாட்டில் கடந்தவாரம் இலங்கை வந்தனர். இந்த உணர்வாளர்களுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்திய பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ பல உறுதிமொழிகளை வழங்கினார். புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு தொடர்பில் முக்கியமாக நாங்கள் கலந்துரையாடினோம். குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பற்றி ஆழமாக கலந்துரையாடினோம். எமது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பாதுகாப்பு செயலர் - 'வேறு எந்த நாட்டிலும் இல்லாதளவிற்கு எமது அரசு – முன்னாள் போராளிகளில் புனர்வாழ்வு தொடர்பில் அதீத அக்கறை காட்டி வருகிறது. முன்னாள் போராளிகளும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களும் சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழல் நிச்சயமாக உருவாகும். குறிப்பாக புனர்வாழ்வு முகாம்களில் இருக்கின்ற பெரும்பாலானவர்கள் கூடிய விரைவில் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுவர்' என்று கூறினார். அத்தோடு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மறுவாழ்வுக்கும் ஜீவனோபாய வழிகாட்டல்களுக்கும் புலம்பெயர் சமூகம் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இலங்கைக்கு விஜயம் செய்த புலம்பெயர் உணர்வாளர்கள் வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம், வெலிக்கந்தை – கந்தக்காடு, சேனபுர ஆகிய புனர்வாழ்வு முகாம்களுக்கும் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டதோடு அவர்களுக்கு தேவையான சிறு உதவிகளையும் வழங்கினர். குறிப்பாக வவுனியா – பூந்தோட்டம் முகாமிலுள்ள தமிழினி உட்பட முன்னாள் பெண் போராளிகளுக்கு 3 தையல் இயந்திரங்கள் மற்றும் 2 கணினிகள் என்பவற்றை புலம்பெயர் உணர்வாளர்கள் நன்கொடையாக வழங்கினர். அத்தோடு, வெலிக்கந்தை முகாமிலுள்ளவர்களுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் சிலவற்றையும் வழங்கினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’