வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

வாழ்வெழுச்சித் திட்டப் பயனாளிகளுக்கு கடன் உதவி


வாழ்வெழுச்சித் திட்டத்தின் கீழ் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்ட கம்பஹா மாவட்டப் பயனாளிகளுக்கு வங்கிகளின் மூலம் கடன் வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் முகமான கூட்டம் இன்றைய தினம் கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நாடளாவிய ரீதியில் மேற்படி திட்டத்தை முன்னெடுப்பதில் அயராது உழைத்துவரும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கம்பஹா மாவட்ட செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி நிகழ்வில் வரவேற்புரையை நிகழ்த்தினார்.

வாழ்வெழுச்சித் திட்டத்தின் நோக்கம் குறித்து அமைச்சின் செயலாளர் திரு. சிவஞானசோதி விளக்கமளித்தார்.

இந் நிகழ்வில் ஒவ்வொரு திணைக்களங்கள் சார்ந்து பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டுள்ள பயனாளிகளும், வங்கிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’