வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 8 ஆகஸ்ட், 2012

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மௌனம் கலைந்துள்ளது முஸ்லிம்களுக்கு எதைக் கொடுக்கப் போகிறோம் என பேச ஆரம்பித்தள்ளார்கள். ரவூப் ஹக்கீம்


மிழ்த் தேசிய கூட்டமைப்பும் இப்பொழுது தனது மௌனத்தை கலைத்திருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதைக் கொடுக்கப் போகிறோம் என அவர்கள் வாய் திறந்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் மூடி மறைத்து, முஸ்லிம் காங்கிரஸோடு நட்புறவோடு இருக்கிறோம் என பேசிக்கொண்டிருந்தவர்கள் இப்பொழுது முஸ்லிம்களுக்கு எவற்றைக்கொடுக்கப் போகின்றார்கள் என்பதை வெளிப்படையாகவே கூறத் தலைப்பட்டிருக்கிறார்கள்.
சர்வதேசத்தின் பார்வையில் நம்பகத் தன்மையுள்ள ஒரு மாகாண அரசியல் செயல்பாடு நடக்கப்போகின்றது ஒரு பிரதானமான விஷயமாகும். அதில் முஸ்லிம்களின் வகிபாகம் என்ன என்பதை நாம் மிகத் தெளிவாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் அக்கரைப்பற்றில் நடைபெற்ற கட்சியின் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார். அடுத்த தசாப்தத்திற்கும், அதற்கு அப்பாலும் சமூகத்தைப் பாதுகாப்பதற்கான ஒரேயொரு வழியாக, அழுத்தங்களை பிரயோகித்து தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை காண்பதற்கான காலம் கனிந்து வருகின்ற நிலையில் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு நாம் முகம் கொடுக்க உள்ளோம் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற காரணத்தினால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இத் தேர்தலில் முதல் தடவையாக போட்டியிடுகிறது. மாகாண சபை உருவாக்கத்தின் பிறகு, தமிழ் ஆயுதக் குழுக்கள் சில மாகாண சபை தேர்தல்களில் போட்டியிட்டனவே தவிர தமிழ் மக்களின் அதிக பட்ச ஆதரவை பெற்ற தமிழரசுக் கட்சி உட்பட தமிழ் தரப்பு போட்டியிடவில்லை. ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் முஸ்லிம் காங்கிரஸை தனித்து செல்ல விட்டதற்காக அமைச்சர்களை ஏசித் தள்ளுகிறார்களாம். முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டுமென்று ஆவலோடு இருந்த கட்சி தலைதப்பினால் தம்பிராண் புண்ணியம் என்று தனித்துக் கேட்கிறோம். ஒரே பட்டியலில் போய், வலயங்கள் பிரித்து, அதாவுல்லாவின் வியூகத்தை முஸ்லிம் காங்கிரஸ் தோற்கடிக்கப்போகிறதென்றும், அதற்குத்தான் முதலிடம் கொடுக்கப் போகிறதென்றும் நினைத்தார்கள். தோற்கடிக்கப்படப் போகிறவர்கள் அவரை விடப் பெரியவர்கள். வெறும் சில்லறைகளை தோற்கடிப்பது எங்களுக்கு சர்வசாதாரணமான காரியம். மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் தலா மூன்று ஆசனங்களை வெற்றி கொள்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் முழு மூச்சாக ஈடுபடுகிறது. இங்கிருப்பதை விட அங்கும் மக்கள் மிகவும் ஆவேசமாக இருக்கிறார்கள். நாங்கள் வென்றெடுக்கும் ஆசனங்களின் எண்ணிக்கையின் ஊடாக நாம் சொல்லப்போகின்ற செய்தி இந்த சமூகத்தை பாதுகாக்கின்ற செய்தியாகும். ஏனென்றால் இப்பொழுது ஜனநாயகப் பயங்கரவாதம் என்றும் ஒன்றுள்ளது. தேர்தல் நடத்துவதே ஒரு பயங்கரவாதம். முடிவில்லாத தேர்தல் மயம். ஆனால், இப்படி அடிக்கடி நடக்கும் தேர்தல்களுக்கு பயப்படுபவர் ரணில் விக்ரமசிங்க மட்டும் தான். ஜனாதிபதி தன்னை நிம்மதியாக இருக்கவிடாமல் தேர்தல் நடத்திக்கொண்டிருக்கிறாரே என்று அவர் பயப்படுகிறார். நாங்கள் அரசாங்கத்திற்கு முட்டுகொடுக்கப் போகிறோம் என்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகும் வெற்றிலைக்குப் போய் முட்டுக்கொடுப்பீர்களே என்று கேள்வி கேட்பார்கள். அந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல தயாராக இருக்க வேண்டும்.. சகோதரர் அதாவுல்லா நாங்கள் மீண்டும் வடகிழக்கை இணைக்கப்போகின்றோம் என்ற ஒரு புரளியை கிளப்பியிருக்கிறார். குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு சிக்கலில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கான ஒருவிதமான வழிவகையை அவர் கையாளுகிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’