வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 8 ஆகஸ்ட், 2012

42 நாடுகளின் பங்குபற்றலுடன் இராணுவ கருத்தரங்கு ஆரம்பம்: சுப்ரமணியம் சுவாமி விசேட உரை


லங்கையின் யுத்த வெற்றி அனுபவத்தை சர்வதேச நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளும் 'இராணுவ கருத்தரங்கு 2012', இன்று புதன்கிழமை கொழும்பில் ஆரம்பமானது.
'நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி' எனும் தொனிப்பொருளில் கொழும்பு கலதாரி ஹோட்டிலில் இன்று ஆரம்பமான இந்த கருத்தரங்கு தொடர்ந்து மூன்று தினங்களுக்கு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்த கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக 63 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் 42 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதன்போது அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள பாதுகாப்பு உயரதிகாரிகள் விரிவுரைகளை வழங்கவுள்ளனர். இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு 'யுத்தத்துக்கு பின்னரான தீர்மானம் மற்றும் இந்தியாவின் அக்கறை' என்ற தலைப்பில் விசேட உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இரண்டு வருட பூர்த்தியில் முதலாவது கருத்தரங்கு கடந்த வருடம் நடத்தப்பட்ட நிலையில் அதன்போது யுத்தத்தின் போதான படைத்தரப்பினரின் முன்னெடுப்புக்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன. இருப்பினும் இம்முறை புனர்நிர்மாணம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, மீள் ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் என்ற அடிப்படைகளில் இந்த மூன்று நாள் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இன்றைய ஆரம்பதின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோர் கலந்துகொண்டு விசேட உரை ஆற்றியதுடன், 'இலங்கையின் மீள் குடியேற்றம் மற்றும் மீள்கட்டுமானம்' என்ற தலைப்பில் இந்திய இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜீ.எஸ்.சேர்கில் மற்றும் 'சிவில் இராணுவ ஒத்துழைப்பு' என்ற தலைப்பில் அமெரிக்க இராணுவ அதிகாரியான பிரிகேடியர் றஸல் ஹவார்ட் ஆகியோர் உரையாற்றினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’