வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 22 ஆகஸ்ட், 2012

அகாஷி – ஜீ.எல்.பீரிஸ் சந்திப்பு



ற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், ஏற்கெனவே அடைந்த முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் தொடர்பாக ஜப்பானிய விசேட தூதுவர் யசூஷி அகாஷிக்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் விபரித்துள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் முன்னாள் போராளிகளை சமூகத்துடன் மீளிணைப்பதற்கான நடவடிக்கைகள், கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள் ஏறுத்தாழ பூர்த்தியடைவதாக அவர் தெரிவித்தார். அரசியல் மற்றும் அரசியலமைப்பு பிரச்சினைகளை ஆராய்வதற்காக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளமை குறித்து அமைச்சர் பீரிஸ் விபரித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’