வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 22 ஆகஸ்ட், 2012

புத்தர் சிலைக்கு முத்தம் கொடுத்த வெளிநாட்டவர் மூவருக்கு விளக்கமறியல்



பு த்தர் சிலைக்கு முன்னால் நின்று அநாகரிக முறையில் புகைப்படங்களை எடுத்ததோடு புத்தர் சிலைக்கு முத்தங்கள் கொடுத்த பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகள் மூவருக்கு காலி நீதவான் நீதிமன்றம் தலா 1500 ரூபா அபராதமும், ஐந்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஆறு மாத சிறைத் தண்டனையும் விதித்துள்ளது.
மேற்படி நபர்கள் விகாரை ஒன்றுக்குச் சென்றிருந்தபோது புத்தர் சிலைக்கு முன்னால் நின்று பல்வேறு கோணங்களில் படங்கள் பிடித்துள்ளனர். பின்னர் ஸ்ரூடியோ ஒன்றுக்குப் புகைப்படங்களைக் கழுவச் சென்றிருந்தபோது குறித்த நபர்கள் புத்தர் சிலைக்கு முன்பாக நின்று அநாகரிகமாக புகைப்படங்கள் எடுத்திருந்தமை ஸ்ரூடியோ முகாமையாளருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஸ்ரூடியோ முகாமையாளர் காலி பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார். குறித்த இடத்துக்கு வந்த பொலிஸார் மூன்று வெளிநாட்டவர்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே ஆறுமாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் பெண்கள் இருவர் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’