மன்னார் திருக்கேதீச்சர ஆலய புனரமைப்பிற்காக நிதியுதவியை வழங்கிய இந்திய அரசுக்கும், மக்களுக்கும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
திருக்கேதீச்சர ஆலயத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் ஆலய புனருத்தாரண அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
ஆலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்தியாவின் கலாசார வீடமைப்பு மற்றும் நகர வறுமை ஒழிப்பு அமைச்சர் குமாரி செல்யா உரையாற்றும் போது, இந்திய இலங்கை நாடுகளின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களைக் கட்டியெழுப்பும் வகையிலும், அதனை இலங்கையின் வடபகுதியில் பாதுகாக்கும் வகையிலும் மன்னார் திருக்கேதீச்சரத்தில் 326 மில்லியன் ரூபா செலவில் இந்தியா புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்கவுள்ளது.
இதற்காக இந்தியாவின் மாமல்லபுரக் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரிகளிலிருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ள புகழ்பெற்ற கலைஞர்கள் இப்புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக்கே காந்தா தெரிவிக்கையில், 2500 வருடங்களுக்கு மேலான கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களை வளர்த்தெடுப்பதற்கு இந்தியா மென்மேலும் உதவும் எனவும், குறிப்பாக வடபகுதியில் யுத்தத்தால் பாதிப்படைந்த பகுதிகளின் அபிவிருத்தியின் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு வழங்கும் மற்றுமொரு உதவித்திட்டம் இதுவென்றும் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது கடந்த கால யுத்தத்தின்போது பாரிய சேதமடைந்த மன்னார் திருக்கேதீச்சர ஆலயப் புனரமைப்புக்காக இந்திய அரசும், மக்களும் வழங்கியுள்ள நிதியுதவிக்கு எமது மக்கள் சார்பில் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.
நிகழ்வில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் றிசாட் பதீயுதீன் அவர்களும் உரையாற்றினார்.
இரண்டு வருடங்களைக் கொண்டதாக அமையப்பெறவுள்ள இப்புனரமைப்புப் பணிகள் எதிர்வரும் 2016 ம் ஆண்டு நிறைவுபெறவுள்ளதுடன் இதற்காக இந்திய அரசு 326 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
முன்பதாக இந்திய மற்றும் இலங்கை அமைச்சர்கள் உள்ளிட்ட அதிதிகள் மங்களவாத்தியம் சகிதம் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து ஆலயத்தின் சிறப்புப் பூசை வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் கலாசார வீடமைப்பு மற்றும் நகர வறுமை ஒழிப்பு அமைச்சர் குமாரி செல்யா திரைநீக்கம் செய்து வைத்தததை அடுத்து ஆலய அறங்காவல்சபையினரால் அதிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் கடந்த யுத்தகாலத்தின் போது சேதமடைந்ததும் புனரமைக்கப்படவுள்ளதுமான ஆலயத்தின் வளாகத்தை பார்வையிட்ட குழுவினர் அது தொடர்பிலும் ஆராய்ந்தறிந்து கொண்டதுடன், வளாகத்தில் மரக்கன்றுகளையும் நாட்டிவைத்தனர்.
கடந்த கால யுத்தத்தின்போது பாரிய சேதத்திற்குள்ளாகிய இவ்வாலயம் 12 ஆண்டுகாலமாக மக்கள் வழிபாட்டிற்காக பூட்டிய நிலையில் இருந்த நிலையில், 2002 ம் ஆண்டு மக்கள் வழிபாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டதுடன், இலங்கையிலுள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் திருக்கேதீச்சரம் முதன்மையான கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது இந்திய துணைதூதுவர் மகாலிங்கம், மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி ஸ்ரான்லிடிமெல், உள்ளிட்ட இந்திய மற்றும் இலங்கையின் துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் லிங்கேஸ், ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட உதவி அமைப்பாளர் சந்துரு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’