வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 4 ஆகஸ்ட், 2012

காமினியின் பிரசார தந்திரோபாயங்கள் குறித்து ரணில் தகவல் வழங்கவில்லை: சந்திரிகா



1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஐ.தே.க. வேட்பாளர் காமினி திஸாநாயக்கவின் பிரசார தந்திரோபாயங்கள் குறித்த ரகசிய தகவல்களை ரணில் விக்கிரமசிங்க தனக்கு வழங்கியதாக கூறப்படுவதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மறுத்துள்ளார்.
'1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது தன்னை ரணில் விக்கிரமசிங்க சந்தித்து, ஐ.தே.க. வேட்பாளர் காமினி திஸாநாயக்கவின் பிரசார தந்திரோபாயங்கள் குறித்த ரகசிய தகவல்களை வழங்கியதாக தற்போதைய அமைச்சரவையின் சிரேஷ்ட அங்கத்தவர் ஒருவர் தெரிவித்தமை தொடர்பான செய்திகளை சந்திரிகா குமாரதுங்க வியப்புடன் அவதானித்துள்ளார்' என சந்திரிகா குமாரதுங்கவின் அலுவலகம் விடுத்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திஸாநாயக்கவினதோ அல்லது ஐ.தே.கவினதோ பிரசார தந்திரோபயங்கள் குறித்து ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் எந்த தகவலையும் வழங்கவில்லை எனவம் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்ததாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்படடுள்ளது. தான் பிரதமராக பதவியேற்றபோது, அப்பதவியிலிருந்து விலகிச்செல்லும் பிரதமர் என்ற வகையில் தன்னை ரணில் விக்கிரமசிங்க சந்தித்து வாழ்த்து தெரிவித்தாகவும் அதேபோல் பிரதமர் பதவியிலிருந்து விலகி நிறைவேற்றதிகார ஜனாதிபதியானபோதும் தனக்கு ரணில் வாழ்த்துதெரிவித்ததாகவும் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார். அதேபோல் ஜனாதிபதி பதவியிலிருந்து டி.பி. விஜேதுங்க ஓய்வுபெற்றபோதும் தான் அவருக்கு பிரியாவிடை வாழ்த்து தெரிவித்து தெரிவித்தாகவும் இது பண்பான மனிதர்களின் வழக்கமான நடைமுறையாகும் எனவும சந்திரிகா தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’