வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

வடக்கின் இராணுவப் பிரசன்னம் குறித்து இப்போது கருத்து கூறுவது முறையல்ல: ஜப்பான்



டக்கில் உள்ள பாதுகாப்பு படைகளின் தொகை குறைந்து வருவதாகவும் அது ஒரு தொடர் செயன்முறையாக காணப்படுவதாகவும் இதனால் வடக்கிலுள்ள இராணுவத்தின் இருப்பு பற்றி இப்போது கருத்துக் கூறுவது பொருத்தமற்றது எனவும் ஜப்பானிய அரசாங்கம் கூறியுள்ளது.
'வடக்கில் இராணுவத்தின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. இருப்பினும் இப்போது இதையிட்டு கருத்துக் கூறுவது பொருத்தமற்றது. ஏனெனில் இது ஒரு தொடர் செயன்முறையாக உள்ளது' என ஜப்பானிய தூதுவர் நபுஹிட்டோ ஹோபோ டெய்லி மிரருக்கு கூறினர். வவுனியா மாவட்டத்துக்கு விவசாயத்திற்கான நன்கொடை உதவியாக 11.7 மில்லியன் ரூபா வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னரே அவர் இவ்வாறு கூறினார். இலங்கை நடுத்தர வருமான நாடு என வகைப்படுத்தப்பட்ட பின் இலங்கைக்கான நன்கொடை உதவிகள் குறைக்கப்பட்டுள்ளன என கூறிய அவர் இருப்பினும் அடி மட்டத்தில் சிறிய செயற்திட்டங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காணப்படுகின்றது என கூறினார். வடக்கில் மீள் குடியேற்றம்பற்றி கருத்து தெரிவித்த அவர், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மீள் குடியேற்றம் விரைந்து நடந்துள்ளது என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’