இ ன்றைய முன்பள்ளி சிறார்கள் யுத்தகாலகட்டத்தில் பிறந்தவர்கள் எனவே இவர்களின் ஆரோக்கியத்திற்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (29) கிளிநொச்சி மத்திய கல்லூரியில் ஆறுதல் நிறுவனத்தின் அனுசரணையுடனும் றோட்ரிக்கோ நிறுவனத்தின் உதவியுடன் ஆரம்பமாகிய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் 47000 முன்பள்ளி சிறார்கள் உள்ளனர். இவர்கள்தான் எமது சமூகத்தின் வருங்கால சொத்து எனவே இவர்களின் உடல் உள ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு யுத்தத்தின் பாதிப்பிலிருந்து மீட்டு சமூகத்தின் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் எனத்தெரிவித்தார்.
முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பில் தெரிவிக்கையில், முன்பள்ளி ஆசிரியர்கள் இன்று அர்ப்பணிப்பு மிக்க வரலாற்று பணியினை மேற்கொண்டு வருகின்றனா.; இவர்களின் அர்பணிப்பு மிக்க பணியினால்தான் எமது சிறார்கள் இன்று ஒரு குறுகிய காலத்திற்குள் சிறந்து விளங்குகிறார்கள். முன்பள்ளி ஆசிரியர்களை பொறுத்தவரை அவர்களின் தகைமைகளுக்கு அப்பால் அவர்களிடம் இருக்கும் ஆளுமை ஆற்றல் அனுபவம் என்பனவே இங்கு ஒரு சிறந்த முன்பள்ளி கல்விச் செயற்பாட்டிற்கு வழிசமைத்துள்ளது. இந்த ஆளுமை ஆற்றல் அனுபவமே என்னைப்பொறுத்தவரை அவர்களின் அதிவிசேட சித்தியாகும் எனத்தெரிவித்த அவர் எப்பொழுதும் முன்பள்ளி ஆசிரியர்களின் பணியோடு சேர்ந்து நிற்போம் அவர்களின் தேவைகள் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இன்று தங்கள் டிப்ளோமா பயிற்சினை தொடங்கும் ஆசிரியர்களை தவிர ஏனைய ஆசிரியர்களும் தங்களது பயிற்சியினை தொடர்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி வலய கல்விப்பணிமனையின் ஆரம்ப பிள்ளைப்பருவ உதவிக்கல்விப்பணிப்பாளர் விந்தன், பேராசிரியர் சின்னத்தம்பி, கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர் முருகவேல் ஆறுதல் நிறுவனத்தின் ஆலோசகர் சுகுமார், அதன் இணைப்பாளர் காயத்திரி, வடமாகாண முன்பள்ளி உதவிகல்விப்பணிப்பாளர் ஜெயா தம்பையா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’