வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

பசீர் சேகுதாவூதை இராஜினாமா செய்யுமாறு நானோ முஸ்லிம் காங்கிரஸோ கூறவில்லை: ஹக்கீம்



பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூதை அவரது பிரதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு நானோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ கூறவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்றிரவு காத்தான்குடியில் வைத்துத் தெரிவித்தார்.
பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூதின் பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்தது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் கேட்;டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் வியாழக்கிழமையன்று காலை கொழும்பில் எனதில்லத்தில் வைத்து நானும் தவிசாளர் பசீர் சேகுதாவூதும் மனம் திறந்து கலந்துரையாடினோம். அப்போது அவர் பிரதியமைச்சர் பதவியை இராஜனாமாச் செய்யப்போவதாக என்னிடம் கூறினார். உடனடியாக அவ்வாறு செய்ய வேண்டாம் என நான் அவரிடம் கேட்டுக்கொண்டேன். இது கூட்டுப்பொறுப்பாகும். கூட்டாகச் சேர்ந்தே எந்த முடிவையும் எடுக்க வேண்டும். எனினும் பின்னர் அவரின் இராஜினாமாக் கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார். அவரை ஒருபோது பிரதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யுமாறு நானோ கட்சியோ கூறவில்லை. கட்சி அவ்வாறு எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’