2017 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தை இரட்டித்து 9 பில்லியன் டொலர் அளவுக்கு உயர்த்தவும் அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை (சீபா) விரைவில் அமுலாக்கவும் இரு நாடுகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்திய வர்த்தக, கைத்தொழில்; அமைச்சரான ஆனந்த சர்மா மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நாளை 3 ஆம் திகதி கொழும்பு வருகிறார்.
இதன்போது மேற்படி விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் வர்த்தக கைத்தொழில் அமைச்சரான ரிசாட் பதியுதீனுடனும் பேசுவார். வாகனங்கள், பொறியியல், உட்கட்டுமானம், சுற்றுலா, உணவு பதப்படுத்தல், கணினி தொழில்நுட்பம், நிதி சேவைகள், மருத்துவ பொருட்கள், கல்வி உட்பட பல பொருட்கள், சேவைகளை 108 இந்திய கம்பனிகள் காட்சிப்படுத்தவுள்ள 'இந்தியன் ஷோ' கண்காட்சியிலும் இந்திய அமைச்சர் கலந்துகொள்வார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’