ம ருத்துவர்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு பொலிஸார் உறுதியளித்துள்ளனர். பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடின்போது இதற்கான இணக்கம் காணப்பட்டது. இதேவேளை மருத்துவர் லலித் அபயரணசிங்கவின் வீட்டின்மீது கைக்குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை குற்றப்புலனாய்வு திணைக்களம்பொறுப்பேற்றுள்ளது.
பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையிலான குழுவினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். முன்னர் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’