வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

அபிவிருத்தி மக்களை அழித்துக்கொண்டு செல்கின்றதே தவிர, மக்களை உயர்த்துவதாக இல்லை: சுரேஷ்


பிவிருத்தி மக்களை அழித்துக்கொண்டுசெல்கின்றதே தவிர, மக்களை உயர்த்துவதாக காணப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் மாபெரும் விவசாயப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கம் வழிவகுப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 'வடமாகாணத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் விவசாய நிலங்களில் மண் அகழ்வுகளை மேற்கொண்டும் தண்ணீர் பிரச்சினையை ஏற்படுத்தியும் மக்களை அவல நிலைக்கு தள்ளுவதற்கு வழி அமைப்படுகின்றது. அபிவிருத்தியின் விளைவாக எத்தனையோ மக்கள் தமது வாழ்விடங்களை விட்டும் தண்ணீர் இன்றியும் அல்லல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். 20 அடி ஆழமான முத்தையன்கட்டுக்குளத்திலிருந்து 60 அடி ஆழம்வரை கல் அகழ்ந்து எடுக்கப்படுகின்றது. இதனால் தண்ணீர் இல்லாது விவசாயத்தை மேற்கொள்ளமுடியாமல் அந்தப் பகுதி மக்கள் பெரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முத்தையன்கட்டுப் பகுதியில் 'நியார்ப்' திட்டத்தில் அமைத்துக்கொடுக்கப்பட்ட 200 வீடுகளிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. 130 ரிப் கல்லுகள் உடைக்கப்படுவதனால் வீதிகள், குளக்கட்டுகள், வீடுகளில் தண்ணீர் வற்றிப்போகின்றன. இவ்வாறு அவலமான நிலையில் மக்கள் வாழ்கின்றனர். இரணைமடுக்குளத்திற்கு அருகில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இரணைமடுக்குளத்தில் 34 அடி ஆழம்வரை தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள வயல்களுக்கு தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகிப்போயுள்ளன. பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டுசெல்கின்றதே தவிர, இனப்பிரச்சினைகள் தீர்வுக்கு கொண்டுவரப்படவில்லை. எங்கு பார்த்தாலும் சிங்கள சமூகத்தினர் மக்கள் உரிமை கேட்டு நிற்கின்றார்கள். வன்னிப் பிரதேசத்தில் மண் அகழ்வுகள் மற்றும் கல் உடைப்புக்களை மேற்கொள்வது முன்னாள் கடற்படையினரும் முன்னாள் இராணுவத்தினர்களும் ஆவர். அவர்களிடம் பொதுமக்கள் கேட்டால் பிரச்சினை வருகின்றது. இதனால் பொதுமக்கள் ஒடுங்கிப்போகின்றார்கள். அபிவிருத்தி சரியான பாதைக்கு சென்றால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என அரசாங்கம் தெரிவிப்பது தமிழ் மக்களை ஏமாற்றும் செயலாகவே இருக்கின்றது. முல்லைத்தீவு மாங்குளத்தினை இணைக்கும் வீதி ஒட்டிசுட்டான் பகுதியில் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தரின் தம்பி கல்குவாரி ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து அங்கு கசிப்பு உற்பத்தி செய்தும் அதை மக்களுக்கு விற்பனை செய்தும் மக்களை கசிப்புக்கு அடிமையாக்குகின்றார். அத்துடன், காடுகள் அழிக்கப்படுகின்றது. இவ்வாறு ஒரு பகுதி காடு அழிக்கப்பட்டுவருகின்றன. இன்னொரு பகுதியில் மக்கள் அவலப்பட்டுபோகின்றார்கள். இதை நாம் கேட்டால் அபிவிருத்தியை குழப்புவதாக குற்றஞ்சாட்டுகின்றார்கள். ஆனால் நாங்கள் அபிவிருத்தியை குழப்புவதற்கு பேசவில்லை. மக்களின் சொத்துக்கள் அழிக்கப்படுவதை தட்டிக்கேட்கின்றோம். இதற்கான பதிலை ஊடகங்கள் மூலமாகவே பெற்றுக்கொள்ள விரும்புகின்றோம்' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’