வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது நாட்டின் எல்லையை தாண்டி விட்டது: சம்பந்தன்


மா"காண சபை முறைமையை சரியான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் நீண்ட கால அபிலாiஷகளுக்கு நிரந்தரமானதும் நியாயமானதும் நிலைத்து நிற்கக்கூடியதமான அரசியல் தீர்வு ஒன்றை காணுவது தொடர்பான நடவடிக்கை நாட்டின் எல்லையை தாண்டி சர்வதேசத்தின் பார்வைக்கு சென்று விட்டது" என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
முறையான அரசியல் தீர்வு ஒன்றை காண வேண்டிய பொறுப்பிலிருந்து இலங்கை அரசாங்கம் தப்பிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். திருகோணமலை, உவர்மலை குமணன் விளையாட்டு கழக மைதானத்தில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திருமலை மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து கடந்த சனிக்கிழமை மாலை நடத்தப்பட்ட பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், "தமிழ் மக்கள் தங்கள் பாரம்பரிய வாழ்விடங்களில் தங்களை தாங்களே ஆளக்கூடிய சுயாட்சியுடனான அரசியல் தீர்வை அடைய வேண்டும் என்பதில் உறுதியாக இன்னும் இருக்கின்றார்களா என்பதை நாடி பிடித்து பார்க்க சர்வதேச சமூகம் கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றது. இதனை சர்வதேச சமூகம் எமக்கும் தெரியப்படுத்தி இருக்கின்றது. எனவே, எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் 95 சதவீதமான தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து தனிப்பெரும் கட்சியாக தெரிவு செய்ய வேண்டும். இதன் மூலம் உரிமை போராட்டத்தில் இன்னும் உறுதிதயாகவும் வைராக்கியத்துடனும் இருக்கின்றோம் என்பதை சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும். கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் மக்கள் நடத்தி வருகின்ற உரிமை போராட்டத்தில் கிழக்கு மாகாண சபை தேர்தலின் முடிவு நிச்சயம் ஒரு திருப்பு முனையாக அமைய போகின்றது என்பதை தமிழ் மக்கள் மனதிலிருத்தி செயற்பட வேண்டும்: என்றார். திருகோணமலை நகர சபை உறுப்பினர் கோ.சத்தியசீலராசா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் உரையாற்றினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’