பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபையின் செயற்றிட்டங்களை நாடளாவிய ரீதியில் மென்மேலும் மேம்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இடம்பெற்றுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
மொறட்டுவ பகுதியில் அமைந்துள்ள கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைமைக்காரியாலய கேட்போர் கூடத்தில் இயக்குனர் சபை அங்கத்தவர்களுடன் மேற்படி கலந்துரையாடல் இன்றைய தினம் (26) இடம்பெற்றது.
இதன்போது கைத்தொழில் அபிவிருத்தி சபையினது பெறுபேறுகளை மேலும் விஸ்தரிக்கும் வகையில் துறைசார்ந்த கைத்தொழிலாளர்களினதும் கைத்தொழிற்பேட்டைகளினதும் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், முக்கிய சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் பித்தளை இரும்பு செம்பு உள்ளிட்ட கழிவு உலோகங்கள் கொள்வனவு செய்யப்படும் அதேவேளை, அவை சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு சரியான முறையில் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் கைத்தொழில் ஆய்வு கூடமொன்றை அமைப்பது தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
இதற்காக அமைச்சர் அவர்களால் நியமிக்கப்பட்ட பிரத்தியேக குழுவிடம் குறிப்பிட்ட சில செயற்றிட்டங்களின் போது இயக்குனர் சபை அபிப்பிராயங்களையும் கருத்துக்களையும் கேட்டறிந்து அவற்றை கவனத்தில் கொண்டு திட்டங்கள் முன்னெடுக்க வேண்டுமெனவும் கைத்தொழில் அபிவிருத்தி சபையினது இயக்குனர் சபை கூட்டம் அமைச்சர் அவர்களின் தலைமையில் காலாண்டுக்கு ஒருமுறை நடாத்தப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இங்கு இயக்குனர் சபை அங்கத்தவர்களினதும், துறைசார்ந்தவர்களினதும் கருத்துக்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சரின் ஆலோசகர் ஜெகராசசிங்கம், கைத்தொழில் அபிவிருத்தி சபைத் தலைவர் உதயசிறி காரியவசம், பொதுமுகாமையாளர் ஜஸ்மின் மன்னப்பெரும ஆகியோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’