வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 6 ஜூலை, 2012

நித்யானந்தா டிரஸ்டுக்கு ஆப்பு வைக்கும் கலிபோர்னியா நீதிமன்றம்: நெல்லை கண்ணன்



லிபோர்னியாவில் செயல்பட்டு வரும் நித்யானந்தா அறக்கட்டளையைச் சேர்ந்த 4 பேரும் குற்றவாளிகள் என கலிபோர்னியா மத்திய நீதிமன்றம் தெரிவித்துள்ளது
என்று மதுரை ஆதீன மீட்பு போராட்டக் குழு தலைவர் நெல்லை கண்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நித்யானந்தா ஏற்கனவே குற்ற வழக்குகளில் கைதானவர். அவர் மீதான பாலியல் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தான் அவர் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக அறிவி்க்கப்பட்டார். இப்படிபட்ட ஒரு சூழ்நிலையில் திருவண்ணாமலையில் தனக்கென அவர் குருபூஜை நடத்தியது, மதுரை பெரிய ஆதீனத்திற்கு இழைத்த துரோகமாகும். கலிபோர்னியாவில் செயல்பட்டு வரும் நித்யானந்தா அறக்கட்டளை மீது வழக்கு நடைபெற்று அந்த அறக்கட்டளையில் உள்ள 4 பேரும் குற்றவாளிகள் என கலிபோர்னியா மத்திய நீதிமன்றம் கூறியுள்ளது. அவர்களுக்கான தண்டனையை வரும் 19ம் தேதி அறிவிக்க உள்ளது. மதுரை ஆதீனத்தில் நித்யானந்தாவின் சீடர்கள் முதியவர் ஒருவரை அடித்து உதைத்த காட்சியை சில தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. எங்கோ நடக்கும் மக்கள் பிரச்சனைகளை கையிலெடுத்து போராடும் மனித உரிமை அமைப்புகள் இதனை கண்டிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. மேலும், நித்யானந்தா மீது மதுரை சோலைகண்ணன் கொடுத்த புகார் மீது 20 நாட்கள் கழித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இத்தனை நாட்கள் கழித்து ஆய்வு நடத்தினால் ஆதாரம் எப்படி கிடைக்கும்? நித்யானந்தா குறித்த அனைத்து தகவல்களையும் அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இன்னும் ஒரு வார காலத்திற்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 12ம் தேதி மதுரை உயர் நீதிமன்றத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை மீது ரிட் மனுத் தாக்கல் செய்யப்படும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’