மனிதக் கடத்தலுக்கு பாதுகாப்பான இடமென தவறாக குற்றஞ்சாட்டி இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் உண்டாக்க முயலும் உள்நோக்கம் கொண்ட சக்திகள் செயற்படுவதாக தெரிகின்றதென அரசாங்கம் நேற்று தெரிவித்துள்ளது.
அண்மையில் கைதுசெய்யப்படட அல்லது கவிழ்ந்த படகுகளிலிருந்து காப்பாற்றப்பட்ட சம்பவங்கள் பலவற்றில் இலங்கையைச் சேர்ந்த புகலிடம் கோருவோர் காணப்படவில்லையென அரசாங்கப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார். 'அடைக்கலம் கோருவோர் இலங்கையிலிருந்து புறப்பட்டதாகக் கூறி இலங்கையை சம்பந்தப்படுத்தும் வகையில் தவறாக தகவல்கள் பரப்பப்பட்ட பல சம்பவங்கள் அண்மையில் நடந்துள்ளன. இவை உண்மையில்லாத புனையப்பட்ட தகவல்கள் ஆகும்' எனவும் அவர் கூறினார். தமது கபட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக சுயஇலாப நோக்கம் கொண்ட சக்திகள் அடைக்கலம் கோரும் சம்பவங்களில் ஸ்ரீலங்காவென்ற பெயரை சேர்த்துவிடுவதாக தெரிகின்றதெனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். பல சம்பவங்களில் அடைக்கலம் கோருவோர் இலங்கையிலிருந்து புறப்பட்டதாக கூறப்பட்டு பின்னர் அது மறுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’