வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 2 ஜூலை, 2012

வடக்கு தமிழர் விவகாரத்தில் அரசாங்கம் தொடர்ந்தும் பாரபட்சம்: அமெரிக்கா



டக்கில் உள்ள தமிழர்களுக்கு அரசு தொடர்ந்தும் பாகுபாடு காட்டுவதாக அமெரிக்கா குற்றஞ் சுமத்தியுள்ளது. இந்நிலைமையினை மாற்றுவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க ஜனநாயக மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் மைக்கல் போஸ்னர் தெரிவித்துள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் அமெரிக்க மகிழ்ச்சி வெளியிட்டுள்ள அதேவேளை ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தமிழ் மக்களின் அமைதியை நிலைநாட்ட இலங்கை அரசுக்கு பாரியதொரு பொறுப்பு தற்போதும் உள்ளது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’