வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 2 ஜூலை, 2012

இலங்கையின் நடவடிக்கையை பொறுத்தே ஜெனீவாவில் இந்தியாவின் நிலைப்பாடு அமையும்


வம்பரில் ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இலங்கையின் மனித உரிமை சாதனை பற்றிய அனைத்துலக ஆவரத்தன பரிசீலனையின்போது புதுடில்லியின் நிலைப்பாடானது, கொழும்பு அதன் மனித உரிமைகள் தொடர்பான கணிப்பை உயர்த்தும் வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில்தான் முற்றுமுழுதாக தங்கியுள்ளது என இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இலங்கை உயர் அதிகாரிகளுக்கு தெளிவாக கூறியுள்ளதாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இன நல்லிணக்கம் மற்றும் தமிழர் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு என்பன இலங்கையர்ளால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டுமென மேனன் அடிக்கடி கூறியமை, இலங்கை கடுமையான பரிசீலனைக்கு உட்படுத்தப்படவுள்ள ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இந்தியா, இலங்கையை குருட்டுத்தனமாக ஆதரிக்கும் என இலங்கை நம்பியிருக்கக் கூடாது என்றே பொருள் கொள்ளப்பட முடியும். அனைத்துலக ஆவர்த்தன பரிசீலனையின் போது இலங்கையின் முன்னேற்றத்தை மதிப்பிடும் பொறுப்பு வழங்கப்பட்ட மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஸ்பெய்ன், பெனின் என்பன ஏனைய இரண்டு நாடுகளாகும். ஐ.நா.மனித உரிமைகள் மன்றத்தின் 19 ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமைக்கு தமிழ் நாட்டின் அழுத்தமே காரணமெனும் தவறான கருத்து இலங்கை உயர் அதிகாரிகளிடத்தும் இலங்கை ஊடகங்களிடமும் காணப்படுகிறது. இலங்கை தூதுக்குழுவில் தலைவரான மஹிந்த சமரசிங்க, அவசரப்பட்டு இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக கூறியமையும் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வைத்த இன்னொரு காரணம் என்ற கருத்து இவர்களிடம் காணப்படுகிறது. இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான மனந்தாங்கல் இந்தியாவுக்கு உள்ளது என்பதையும் கொழும்புடனான கோபத்தில் வெளிப்பாடே இலங்கைக்கு எதிரான இந்தியாவின் வாக்கு என்பதையும் இலங்கை அதிகார பீடங்கள் அறிந்திருக்கவில்லை. இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ள அதிகார பகிர்வை முறையாக நடைமுறைப்படுத்துவதாக இலங்கை 2009 இல் வாக்குறுதி அளித்தது. ஆனால் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’