தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் உட்பட அக்கட்சி முக்கியஸ்தர்கள் எட்டு பேர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் தெலைபேசியில் மூலம் தெரிவித்தார்.
ஜுலை 25 படுகொலைகளை நினைவு கூரும் வகையில், 1983இல் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற குட்டிமணி தங்கத்துரை உள்ளிட்ட 53 பேரது படுகொலையை நினைவு கூரும் சுவரொட்டிகளை இன்று வியாழக்கிழமை இரவு ஒட்டிக்கொண்டிருந்த போதே படையினராலும் பொலிஸாரனாலும் தாம் நெல்லயடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார். யாழ். குடாநாடு முழுவதும் வெலிக்கடை படுகொலையை நினைவு கூரும் சுவரொட்டிகளை தாம் ஒட்டிவந்த போதும் நெல்லியடியில் பொலிஸாரினால் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பாக நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் வினவிய போது, "இவர்கள் கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும்" தெரிவித்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’