வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 11 ஜூலை, 2012

வடமாகாண சபைத் தேர்தல் 2013 செப்டெம்பரில் : ஜனாதிபதி



டமாகாண சபைத் தேர் தேர்தல் 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். த ஹிந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவுக்கு வந்தபின் மக்கள் இப்பகுதிகளுக்கு திரும்பிக்கொண்டிருப்பதாகவும் இவர்களையும் வாக்காளர் இடாப்பில் சேர்க்க வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மீளக்குடியமர்தல், புனர்வாழ்வு என்பன பூர்த்தியாக்கப்பட வேண்டிய பிரச்சினையாகவும் உள்ளது. வெளிநாட்டு உதவியுடன் இது விரைவில் பூர்த்தியாகிவிடும் என அவர் கூறினார். இராணுவ பிரசன்னம் அதிகம் காணப்படுவதுபற்றி கருத்துரைத்த அவர், இராணுவம் தேவையான போதுமட்டுமே வெளியில் வரவேண்டுமென இராணுவத்துக்கு அறிவித்துள்ளதாக அவர் கூறினார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமைக்கு 2009 இல் மனித உரிமை மன்றத்தில் அளித்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற தவறியதே காரணம் என்பதை ஜனாதிபதி ராஜபக்ஷ மறுத்தார். தனது அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது எனவும் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதில் மிக மிக அக்கறையாக உள்ளதாகவும் கூறிய ராஜபக்ஷ, 13ஆம் திருத்தத்துக்கு அப்பால் செல்லவும் தான் தயாராக இருப்பதாகக்கூட கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 'பிளஸ்' பற்றி முதன்முதலாக விளக்கமளித்த ஜனாதிபதி ராஜபக்ஷ, செனட் சபை அமைப்பதையே அது குறிக்கும் என்றார். செனட் அமைத்தல், தேவையான திர்வை பெற்றுகொள்ளுதல் என்பன நாடாளுமன்றத்திலிருந்து வரவேண்டும். இதனால்தான் நாடாளுமன்ற தெரிவுக்குழு முக்கியத்துவம் பெறுகின்றது என அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’