வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 26 ஜூன், 2012

பாடசாலைகளில் காணப்படுகின்ற மேலதிக ஆசிரிய வளம் வினைத்திறன் மிக்க கல்விச் செயற்பாட்டுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்



சில பாடசாலைகளில் காணப்படுகின்ற மேலதிக ஆசிரிய வளம் அந்த பாடசாலையின் வினைத்திறன் மிக்க கல்விச் செயற்பாட்டுக்கு பெரும் பாதிப்பாக அமையும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (25) யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச பிரிவிற்குட்பட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு காணும் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் எந்த திணைக்களங்களுக்கும் அதன் வினைத்திறன் மிக்க செயற்பாட்டுக்கும் சீரான நிர்வாக நடவடிக்கைகளுக்கும் மேலதிக வளங்கள் இடையூறாக காணப்படும். ஆளுமை வளங்களாயினும் சரி இதர பௌதீக வளங்களாயினும் சரி தேவைக்கு அதிகமாக காணப்படுமிடத்து அவை பல்வேறு வகையில் இடையூறுகளையே விளைவிக்கும்.

அதிலும் கல்வித்துறையில் பாடசாலைகளில் காணப்படுகின்ற மேலதிக ஆசிரிய வளம் எப்பொழுதும் வினைத்திறன் மிக்க கல்விச் செயற்பாட்டிற்கு உகந்தது அல்ல. ஆசிரியர்களுக்கு பாடங்களுக்கான நேர அட்டவணை தயாரிப்பதி;ல் இருந்து அனைத்து செயற்பாட்டிற்கும் மேலதிக ஆசிரிய வளம் இடையூறாகவே அமையும் எனவே இதில் உரிய பொருத்தமான நடவடிக்கைகள் எடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் சில பாடசாலைகளில் மட்டும் மேலதிக ஆசிரியர்கள் எந்த விதத்திலும் நியாயமாகாது எனவும் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

நல்லூர் பிரதேச மக்களின் ஏனைய தேவைகளையும் கேட்டறிந்து சமூகமளித்திருந்த உரிய அதிகாரிகள் மூலம் அதற்கான பதிலையும் பெற்றுக் கொடுத்ததுடன் பிறிதொரு சந்தர்ப்பத்தில் நல்லூர் பிரதேச மக்களின் பிரச்சினைகள் தேவைகள் என்பவற்றை விரிவாக ஆராய்ந்து உரிய தீர்வுகள் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

நல்லூர் பிரதேசத்தில் பல்வேறு துறைகளிலும் மக்களுக்கு சேவைகள் ஆற்றிய பல சமூக சேவையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலன்ரின் (உதயன்) ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) நல்லூர் பிரதேச செயலாளர் செந்தில் நந்தன் மாகாண கல்விப் பணிப்பாளர் விக்னேஸ்வரன் மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் அண்ணாத்துறை மாகாண முன்பள்ளி உதவி கல்விப் பணிப்பாளர்  திருமதி தெய்வேந்திரம் வீதி அபிவிருத்தி சபையின் மாகாண பாணிப்பாளர் மரியதாஸ் ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச அமைப்பாளர் ரவீந்திரன் கோட்டக் கல்வி அதிகாரி வரதலிங்கம் மாநகரசபை ஆணையாளர் கிராம அலுவலர் மக்கள் அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




























0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’