யாழ் நகரப் பகுதியிலுள்ள பல்வேறு வர்த்தக நிலையங்களினது உரிமங்கள் தொடர்பில் அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் துறைசார்ந்தோரிடம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டறிந்து கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் (18) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் அவர்கள் இவ் விடயத்தில் கவனம் செலுத்தினார். இதன்போது நகரின் நவீனசந்தை உட்பக்கம் வெளிப்பக்கம் மற்றும் மேல்மாடி கஸ்தூரியார் வீதி ஸ்ரான்லி வீதி முனீஸ்வரா வீதி ஆகிய பகுதிகளிலுள்ள மாநகரசபைக்குரிய வர்த்தக நிலையங்களினது உரிமங்கள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார். குறிப்பாக கைமாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் அவற்றின் சொந்தக்காரர்கள் தற்போதைய உரிமையாளர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. அங்;கு கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள் இந்த நகரத்தையும் வர்த்தக நிலையங்களையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பதற்கு அனைத்து வர்த்தகர்களும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமெனவும் இதில் யாழ் மாநகர சபையினது பங்கு முக்கியமானதெனவும் தெரிவித்தார். கடந்த காலங்களைப் போலல்லாமல் இனிவரும் காலங்களில் ஆக்கத்திற்காகவும் அபிவிருத்திக்காகவும் பணத்தைச் செலவு செய்யுங்கள் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள் எதிர்காலங்களில் நகரின் குறைகள் நிறைகள் தொடர்பாக தகவல் பெட்டிகள் மூலமாக கருத்துக்கள் கேட்டறியப்படும் என்றும் வர்த்தகர்களை தொலைபேசியில் மிரட்டி யாராவது கப்பம் கேட்டால் உடனடியாகவே தன்னுடைய கவனத்திற்கோ பொலிசாரின் கவனத்திற்கோ கொண்டு வருமாறும் கேட்டுக்கொண்டார். அத்துடன் மத்திய பேருந்து நிலையத்தின் கிழக்கு புரமாக தற்போதுள்ள கடைத்தொகுதியை இரண்டுமாடிக் கட்டிடமாக்கி நவீனப் படுத்துவது தொடர்பிலும் அதில் முனீஸ்வரன் வீதியிலுள்ள வர்த்தக நிலையங்களை மாற்றுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மாநகர ஆணையாளர் பிரணவநாதன் சட்டத்தரணி திருமதி லிங்கா துரைராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’