வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 30 ஜூன், 2012

வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனின் எலும்புக்கூட்டை ஆராய்வதற்காக கேம்பிரிட்ஜ் நிபுணர்கள் இலங்கை விஜயம்



ண்மையில் பாஹியங்கலையில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்குரிய மனிதனின் எலும்புக்கூடு தொடர்பாக ஆராய்வதற்கு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் மானுடவியலாளர்கள் குழுவொன்று இன்று இலங்கைக்கு வரவுள்ளது.
மேற்படி சடலத்தின் எச்சங்கள் தொடர்பாக இக்குழுவினர் உயர் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொள்வர் என தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வுப் பணிப்பாளரான கலாநிதி நிமல் பெரேரா கூறினார். அத்துடன் மேற்படி, சடலம் காணப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள மண்ணின் மாதிரிகள், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஆய்வுக்கூடமொன்றுக்கு ஆய்வுகளுக்காக விரைவில் அனுப்பப்படவுள்ளதாகவும் கலாநிதி நிமல் பெரேரா கூறினார். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துக்குரிய மனிதனின் எலும்புக்கூடு எனக் கருதப்படும் மேற்படி எலும்புக்கூடானது களுத்துறையில் பாஹியங்கல பிரதேசத்தில் கடந்த 15 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து மனிதனின் முழுமையான எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டமை இதுவே முதல் தடவை என தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் தஸநாயக்க கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’