வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 16 ஜூன், 2012

இன்றைய உலகில் இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சியும் மொழித்திறனும் கட்டாயமானது - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.



ன்றைய நவீன உலகில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பயிற்சியும் பன்மொழித்திறனும் கட்டாயமானது சவால்கள் மிக்க இக் காலத்தில் அதனை சமாளித்து முன்னோக்கிச் செல்ல தனியே ஏட்டுக்கல்விக்கு அப்பால் இவ்வாறான மேலதிக தகைமைகள் இருக்கவேண்டுமென ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (14) கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையில் தொழில் பயிற்சியினை முடித்துக்கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் அரச மற்றும் தனியார் துறைகளில் இலகுவில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளவும் தனிநபர் தகைமைகளை வளர்த்துக்கொள்வதற்கும் ஒருவர் தன்னுடைய மேலதிக தகைமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலங்களில் இது போன்ற தொழிற்பயிற்சி நிலையங்கள் இன்மையால் பெரும்பாலான இளைஞர் யுவதிகள் வேலையற்றவர்களாக காணப்பட்டனர் ஆனால் தற்போது மீள்குடியேற்றத்திற்கு பின்பு இம்மாவட்டத்தில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் அலுவலகம் திறக்கப்பட்டு பெரும்பாலான இளைஞர் யுவதிகளுக்கு தொழில்பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலையும் பெற்றிருப்பது மகிழ்;ச்சியான விடயமே. மேலும் இந்த மாவட்ட இளைஞர் யுவதிகள் இது போன்ற தொழில் பயிற்சி நிலையங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே எம் அனைவரினதும் எதிர்பார்ப்பு ஆகும் இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரை வேலைவாய்ப்பு வழங்கும் விடயங்களில் முதலில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்;டும் என்பது எமது கொள்கையாகும் அதன் மூலம் மாவட்டத்தின் வேலையற்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியும் என்ற நம்பிக்கையுண்டு எனத் தெரிவித்தார். மேலும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கு பன்மொழியாற்றல் பன்முகத்திறன்கள் என்பது இன்றைய காலத்தின் தேவை எனவும் சுட்டிக்காட்டினார். இன்று இடம்பெற்ற இந்நிகழ்வில் தொழில்பயிற்சியினை முடித்துக்கொண்ட 55 மாணவர்களுக்கு ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் உள்ளிட்ட விருந்தினர்கள் சான்றிதழ்களை வழங்கிக் கௌரவித்தனர். இலங்கை தொழில்பயிற்சி அதிகார சபையின் கிளிநொச்சி நிலைய பயிற்சி ஆசிரியர் தினேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் வட மாகாண உதவிப்பணிப்பாளர் வினோதராஜா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் மற்றும் பயிற்சினை முடித்துக்கொண்ட இளைஞர் யுவதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’