வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 15 ஜூன், 2012

நித்தி ஜாமீனில் விடுதலை



பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக நேற்று கைது செய்யப்பட்ட நித்தியானந்தா இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
முன்னதாக நித்தியானந்தா தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அவரது முன்னாள் சீடர் ஆர்த்தி என்பவர், காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக, நித்தியானந்தா கூட்டியிருந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், அவரது சீடர்கள் நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் நித்தியானந்தாவை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்திய கன்னட அமைப்பினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதல்கள் பற்றி ராமநகரம் மாவட்ட ஆட்சியர், கர்நாடக அரசுக்கு முழு விவரம் அடங்கிய அறிக்கையை சமர்பித்தார்.அரசுக்கு சமர்பிக்கப்பட்ட அறிக்கையை அடுத்து, கர்நாடக காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் நிதிதயானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா, நித்தியானந்தாவை கைது செய்ய உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக நித்தியானந்தா நேற்று கர்நாடக காவல்துறையால் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நித்தியானந்தாவை ராமநகரம் மாவட்ட ஆட்சியர் ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’