வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 21 ஜூன், 2012

சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு அபிவிருத்தியடைந்த நாடுகளே பொறுப்பு: ஜனாதிபதி மஹிந்த



சு ற்றுச்சூழல் நெருக்கடிக்கு பெரிதும் காரணமான அபிவிருத்தியடைந்த நாடுகள் சுற்றுச்சூழலை பேணும் பொறுப்பை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிடம் விட்டு விட கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நிலையான அபிவிருத்தி பற்றிய ஐக்கிய நாடுகளின் றியோ 1020 மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், "பொருளாதார அபிவிருத்தியை தியாகம் செய்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொறுப்பை சூழல் நெருக்கடிக்கு முக்கிய பங்காற்றிய அபிவிருத்தி அடைந்த நாடுகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிடம் விட்டு விட முடியாது. விட்டு விடவும் கூடாது. நிலைத்துநிற்க முடியாத நுகர்வு, உற்பத்தி செயல் முறைகளை ஆகவும் குறைந்தளவிற்கு கொண்டுவருவதற்கு உரிய வழிகளில் ஒன்று பசுமை பொருளாதாரத்துக்கு மாறுவதாகும். மறுபுறத்தில் பசுமை பொருளாதாரத்துக்கு மாறுவது ஒரு நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்தியின் வளர்ச்சியை குறைக்கும் புறக் காரணிகளை தோற்றுவிக்க கூடாது. நிலைபேறான அபிவிருத்திக்கான உபாயங்கள், வறுமை ஒழிப்பு, மூல வளங்கள் மற்றும் சக்தி ஆகியவற்றின் வினைத்திறன் மிக்க பயன்பாடு, சமநீதி, உயர்ந்த வாழ்க்கை தரம் என்பவை சகலருக்கும் கிடைக்கும் வகையிலான கொள்கைகள் எண்ணக் கருக்களிலிருந்து தோற்றம் பெற வேண்டும்" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’