வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 29 ஜூன், 2012

மும்பை தாக்குதலில் ஜிண்டால் ஈடுபட்டதை பாக். ஒப்புக் கொள்ள வேண்டும்: ப.சிதம்பரம்



மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட அபு ஜிண்டால் பாகிஸ்தானில் இருந்ததை அந்நாடு ஒப்புக் கொண்டாக வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் கூறியதாவது: மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் உட்பட 10 பேருக்கும் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் அபு ஜிண்டால்தான் பயிற்சி கொடுத்திருக்கிறான். மும்பை தாக்குதலின் மூளையாகவும் செயல்பட்டவர்களில் ஒருவன் அபு ஜிண்டால். அவன் பாகிஸ்தானின் கராச்சியில் செயல்பட்ட மும்பை தாக்குதலுக்கான கட்டுப்பாட்டு அறையில் இருந்திருக்கிறான். அவனுடன் மற்றொரு தீவிரவாதி ஹபீஸ் சயீத்துடம் உடன் இருந்திருக்கிறான். இதற்குப் பிறகாவது பாகிஸ்தான், அபு ஜிண்டால் அந்நாட்டில்தான் இருந்தான் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். அபு ஜிண்டால் இந்தியர் என்று பாகிஸ்தான் அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறியிருக்கிறார். உண்மைதான். அபு ஜிண்டால் இந்தியர்தான். ஆனால் அவனுக்கு புகலிடம் கொடுத்தது பாகிஸ்தான் நாடுதான். அவனுக்கு போலி பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்ததும் அந்தநாடுதான் என்றார் அவர். சவூதி அரேபியாவில் பதுங்கி இருந்த அபு ஜிண்டால் நாடு கடத்தப்பட்டு டெல்லியில் ஜூன் 21-ந் தேதி கைது செய்யப்பட்டான். அவனிடம் தேசிய புலனாய்வு முகாமை விசாரணை நடத்தி வருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’