வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 11 மே, 2012

சிறிலங்காவில் உள்ள தமிழர்கள் தமிழீழம் கேட்கவில்லை – மதுரை மாநாட்டில் சுஸ்மா சுவராஜ்



மிழர் பிரச்சினைக்கு தமிழீழம் தான் தீர்வு என்று பேசி, சிறிலங்காவைப் பிளவுபடுத்த தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் அங்குள்ள தமிழர்கள் தமிழீழம் கேட்கவே இல்லை என்று பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவியுமான சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நேற்று நடைபெற்ற பாஜகவின் மாநில மாநாட்டில் உரையாற்றிய அவர், தனது சிறிலங்கா பயணம் குறித்து விளக்கமளித்தார். “சமீபத்தில் எனது தலைமையில் சிறிலங்காவில் உள்ள தமிழர்கள் நிலை குறித்து அறிய, அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய மத்திய அரசின் குழு ஒன்று சென்றது. சிறிலங்கா செல்வதற்கு முன்பே, நாங்கள் சொல்லும் இடங்களுக்கு எங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தோம். அங்கு முகாம்களிலுள்ள தமிழர்கள் எங்களிடம் தங்களது துன்பங்களை எடுத்துக் கூறினர். சிறிலங்கா தமிழர்கள் உணர்வுகள், தமிழ்நாட்டினது உணர்வு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களின் உணர்வு என்று நாம் சிறிலங்கா அதிபர் ராஜபக்சவிடம் தெரிவித்தோம். தமிழர் சகோதரர்களுக்கு சிறிலங்காவில் உண்மையான அரசியல்தீர்வு கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சிறிலங்காவில் போர் குறித்து ஆய்வு செய்ய சிறிலங்கா அரசு அமைத்த குழுவின் பரிந்துரையை ஏற்க மறுப்பது ஏன் என ராஜபக்சவிடம் கேட்டோம். சிறிலங்கா நாடாளுமன்றக் குழு அமைத்து, ஏன் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடாது என அவரிடம் கேள்வி எழுப்பினோம். இந்த முறையிலான தீர்வுக்கு ஏன் முயற்சிக்கக் கூடாது என தமிழர் பிரதிநிதிகளிடமும் தெரிவித்தோம். தமிழர் பிரச்சினைக்கு தமிழீழம் தான் தீர்வு என்று பேசி, சிறிலங்காவில் பிளவை உண்டாக்க இங்குள்ள தலைவர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால் சிறிலங்காவில் உள்ள தமிழர்கள் தமிழீழம் கேட்கவே இல்லை. ஒன்றுபட்ட சிறிலங்காவில் தமிழர்களுக்கு தனியான அரசியல் தீர்வு வேண்டும் என்றே கேட்கின்றனர். நாங்கள் சிறிலங்காவுக்கு சுற்றுலா சென்றதாகவும், சிறிலங்கா அதிபரிடம் கைநிறைய பரிசுப் பொருட்கள் வாங்கி வந்ததாகவும் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். அது எனக்கு வருத்தம் தருகிறது. அவர்கள் சொல்வது தவறானது. நான் இந்திய அரசு சார்பில் சென்றதால், மரியாதை நிமித்தமாக ராஜபக்ச பரிசளித்தார். அந்தப் பரிசை நான் வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை. இந்திய அரசு சார்பில் சென்றதால், எனக்கு வழங்கப்பட்ட அந்தப் பரிசை, நாடாளுமன்ற கருவூலத்தில் ஒப்படைத்து விட்டேன். சிறிலங்காவுக்கு நான் சென்ற பயணத்தின் நோக்கத்தை உண்மையாக நிறைவேற்றி விட்டேன்“ என்று சுஸ்மா சுவராஜ் குறிப்பிட்டார். இவர் தனியே சிறிலங்கா பயணம் குறித்தே உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’