வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 11 மே, 2012

கண்டி பல்லேகல கைத்தொழில் பேட்டைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்! கேட்போர் கூடம் திறந்து வைப்பு.



பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கண்டி பல்லேகல கைத்தொழில் பேட்டைக்கு விஜயம் மேற்கொண்டு கேட்போர் கூடத்தைத் திறந்து வைத்ததுடன் தொழிற்துறை நடவடிக்கைகளையும் பார்வையிட்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கண்டி பல்லேகல பகுதியில் அமையப்பெற்றுள்ள கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் கீழான கைத்தொழிற்பேட்டைக்கு அமைச்சர் அவர்கள் விஜயம் மேற்கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட கேட்போர் கூடத்தை திறந்து வைத்தார். முன்பதாக அமைச்சர் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரதியமைச்சர் வீரக்குமார திசநாயக்க ஆகியோர் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டதைத் தொடாந்து மங்கள விளக்கினையும் ஏற்றிவைத்தனர். கேட்போர் கூடத்திற்கான நினைவுக்கல் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து லால் விக்கிரமரட்ண தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.சிவஞானசோதி உரையாற்றும் போது மகிந்த சிந்தனையின் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையின் கீழும் வழிகாட்டலுடனும் நாடளாவிய ரீதியில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்கள் பாரிய அளவில் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. இதனூடாக குடிசைக் கைத்தொழில்கள் மட்டுமல்லாது வாழ்வெழுச்சித் திட்டத்தினூடாகவும் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறை மூலம் வேலையற்ற இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் அவர்கள் சார்ந்த குடும்பங்களின் பொருளாதாரமும் மேம்பட வாய்ப்புள்ளதாகவும் இத்தொழிற்துறைகளை நவீன மயப்படுத்துவதனூடாகவும் எதிர்காலத்தில் சிறந்த உள்@ர் மற்றும் வெளியூர் சந்தை வாய்ப்புகளினூடாக நாட்டின் பொருளாதாரமும் அபிவிருத்தியடையும் என்றும் சுட்டிக்காட்டினார். அங்கு பிரதியமைச்சர் வீரக்குமார திசநாயக்க அவர்கள் உரையாற்றும் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இவ்வாறான தொழிற்துறைகளை மேம்படுத்துவதற்கு கிடைக்கப்பெறுகின்ற தருணங்களை சகலரும் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் ஊடாக மென்மேலும் வளர்ச்சி காண முடியும் என்றும் தெரிவித்தார். ஐம்பத்து நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கைத்தொழில் பேட்டையில் தற்காலிகம் மற்றும் நிரந்தரம் என ஐயாயிரத்துக்கும் அதிகமான ஆண் பெண் தொழிலாளர்கள் தொழில் புரிந்து வருகின்றனர். இக்கைத்தொழில் பேட்டையின் பல்வேறு தொழிற்துறைகளுக்கும் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் தொழில் நடவடிக்கைகளைப் பார்வையிட்டதுடன் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து அவை தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் உறுதிமொழி வழங்கினார். இதன்போது பிரதியமைச்சர் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்துகொண்டனர்.











































0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’