கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடம் மற்றும் விவசாய பீடம் வளாகத்தை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க அவர்களும் இன்று பார்வையிட்டனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
மேற்படி வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடங்கள் மற்றும் காணியை பார்வையிட்டதுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டிட புனரமைப்புப் பணிகள் குறித்தும் ஆராய்ந்துள்ளனர். 500 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இவ்வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் தொடர்பிலும் இன்றைய தினம் ஆராயப்பட்டது. இதில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா இந்திய பிரதி உயஸ்தானிகர் திரு.பி.குமரன் யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதரக உயஸ்தானிகர் திரு.மகாலிங்கம் யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் உட்பட துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். மேற்படி புனரமைப்புப் பணிகள் வெகுவிரைவில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’