வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 10 மே, 2012

மாடுமேய்த்த குற்றத்திற்காக இளைஞரைச் சுட்டது இராணுவம்!



வி சுவமடுப் பகுதியில் வெசாக் வெளிச்சக்கூட்டினை மாடு தேசப்படுத்தியதற்காக இராணுவத்தினரால் சுடப்பட்ட இளைஞர் அனுராதபுரம் வைத்தியசாலையில் கொல்லப்படுவாரா? என்று மக்களால் சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
சில நாட்களுக்கு முன்னர் விசுவமடுப் பகுதியில் இராணுவத்தினர் அமைத்திருந்த வெசாக்கூடு ஒன்று மாடு ஒன்றினால் சேதப்படுத்தியிருக்கின்றது. இதனால் ஆத்திரமடைந்த இராணுவத்தினர் அந்த மாட்டினை மேய்த்துவந்ததாக இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டிருக்கின்றார். சம்பவத்தில் குறித்த இளைஞர் படுகாயம் அடைந்திருக்கின்றார். அவரை மேலதிக சிகிச்சைக்காக உலங்குவானூர்தி மூலம் அனுராதபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது. குறித்த இளைஞர் உயிர்தப்பித்தால் சம்பவம் தொடர்பிலான தகவல்கள் வெளிவரக்கூடும் என்ற அச்ச நிலையினாலேயே அவரை இராணுவத்தினர் அனுராதபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும், இதனால் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் அபயாம் இருப்பதாகவும் இளைஞரின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர். இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருந்தமையை ஜே.வி.பியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் நாடாளுமன்றில் நேற்று உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’