வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 5 மே, 2012

சிறீலங்கன் எயார்லைன்ஸ் கிளை யாழ்ப்பாணத்தில் அமைச்சர் திறந்து வைத்தார்!


சிறீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் யாழ்.மாவட்டத்திற்கான புதிய கிளையினை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணத்தில் புதிதாக அமையப் பெற்றுள்ள இப்புதிய கிளை இன்றைய தினம் (04) திறந்து வைக்கப்பட்டது. முன்பதாக நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சர் அவர்கள் மங்கள வாத்தியம் சகிதம் நிகழ்விடத்திற் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டன. சிறீலங்கன் எயார் லைன்ஸ்சின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சமயத் தலைவர்களின் ஆசியுரைகளை அடுத்து பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வாழ்த்துரையாற்றும் போது 30 வருடங்களுக்கு பிறகு இம் மாவட்டத்தில் மீண்டும் விமானசேவை ஏற்பாடுகள் செய்ய முன்வந்ததையிட்டு துறைசார்ந்த அனைவருக்கும் மக்களின சார்பில் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் எதிர்காலத்தில் இதன் சேவை சிறக்க வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெயசீலன் உரையாற்றும் போது ஒரு காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் வடமாகாணத்தின் பங்கு முக்கியமானது என்றும், எனவே மீண்டும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு வடமாகாணத்தின் பங்கு முக்கியமாகத் தேவை என்றும் சுட்டிக்காட்டினார். நிகழ்வில் முதலாவது பயணச்சீட்டினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வழங்கி வைத்து நிறுவனத்தினது பணிகளை சம்பிரதாயபூர்வமாகத் தொடக்கி வைத்தார். இந்நிறுவனத்தினூடாக இலங்கையிலிருந்து 60 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான பயணச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.



















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’