வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 19 மே, 2012

நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசு அமுலாக்கம், போர்க் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் வெளிப்படைத்தன்மை வேண்டும்: அமெரிக்கா


லங்கையின் யுத்தத்தின் பின் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக தீவிரமான முழுமையான திட்டமொன்றை இலங்கை முன்வைத்துள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அத்துடன் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறும் இலங்கையை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வாஷிங்டனில் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் செய்தியாளார் மாநாட்டில் அத்திணைக்களத்தின் பேச்சாளர் விக்டாரியா நூலண்ட் இது தொடர்பாக கூறுகையில், "நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துதல் மற்றும் அதை பகிரங்மாக்குவதற்கும் அணுகப்படக்கூடியதாக்குவதற்குமான அவரின் அரசாங்கத்தின் மிகத் தீவிரமான மற்றும் விசாலமான திட்டத்தை அமைச்சர் பீரிஸ் சமர்ப்பித்தார்" என்றார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிகளை அமுல்படுத்துவதில் மாத்திரமல்லாமல், போர்க் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதிலும் வெளிப்படையான, பகிரங்க செயன்முறையை கிளின்டன் ஊக்குவித்தார் எனவும் விக்டோரியா நூலண்ட் தெரிவித்தார். 'சிறந்த திட்டம். இப்போது நீங்கள் அதை பகிரங்கமாக்க வேண்டும். உங்கள் மக்களுக்கும் உலகிற்கும் நீங்கள் அதை வெளிப்படு;த்த வேண்டும்' என அவர்கூறினார். இதேவேளை அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தாம் செயற்திட்ட அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவில்லை எனக் கூறினார். 'இதுவரை நாம் என்ன செய்தோம். என்ன செய்யப்படுகின்றன. எதிர்காலத்திற்கான எமது பயணப்பாதை தொடர்பான எமது எண்ணங்கள் முதலியவை தொடர்பாக முழுமையாக விளக்கினோம்' என அவர் தெரிவித்தார். அதேவேளை, சர்வதேச விசாரணை தொடர்பான இலங்கையின் ஆட்சேபத்தையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். "நல்லிணக்க செயற்பாடொன்று வெற்றிகரமாக வேண்டுமானால் அது எமது மக்களின் உணர்வுகளையும் அபிலாஷைகளையும் பிரதிபலிக்க வேண்டும்" என அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’