வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 17 மே, 2012

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக நவம்பரின் பின் வீதிப் போராட்டம்: ரணில்



தொ டர்ந்து உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக வலுவான போராட்டங்களை எதிர்க்கட்சியினர் முன்னெடுக்கவில்லை என மக்கள் குறைப்படுவதால், தனது கட்சி அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை மும்முரமாக முன்னெடுக்கப்போவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
தெல்கந்த வாராந்த சந்தையின் வியாபாரிகளை ஸ்ரீகொத்தாவில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை சந்தித்த போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, தான் அண்மையில் சந்தித்த பெண்ணொருவரின் கதையைக் கேட்ட பின்னரே தான் உறுதியான ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயாரான மேற்படி பெண், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் போது எதிர்க்கட்சி நாடாளுமன்றத்திலும் வேறு இடங்களிலும் அது பற்றி பேசினாலும் மக்களுக்கு நிவாரணம் ஏதும் கிடைப்பதில்லை என கூறினார். அரசாங்கத்துக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் வரை ஐ.தே.க. கால அவகாசம் கொடுக்கும். அதற்குள் நல்ல மாற்றம் ஏற்படாவிடின் அரசாங்கத்துக்கு எதிராக வீதிப் போராட்டங்களை நடத்தும். நாம், தேசிய பிரச்சினையை நாடாளுமன்ற தெரிவுக்குழுவினூடாக தீர்க்கும் ஒரு திட்டத்தை வகுத்து வருகின்றோம். ஆனால், அதேசமயம், வேகமாக உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுப்போம். அரசாங்கம் எந்தப் பிரச்சினையையும் கணக்கில் எடுப்பதில்லை. இதனால், புதிய பிரச்சினைகள் தோன்றுகின்றன என்று ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். தெல்கந்தை வாராந்தச் சந்தையை வேறு இடத்துக்கு கொண்டுசெல்லும் பிரச்சினை தொடர்பாகவே விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார். இப்பிரச்சினையை வளரவிடாது தீர்த்துக்கொள்ள வேண்டும். தெல்கந்தை சந்தை 60 வருடங்களாக அவ்விடத்திலேயே நடைபெறுகின்றது. இந்த வியாபாரிகளை நீதியாக நடத்த வேண்டும்' என ரணில் மேலும் கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’