வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 9 மே, 2012

கிழக்கு வெற்றி வாய்ப்பு குறித்தே பேசப்பட்டது'



கிழக்கு மாகாணசபையை கலைத்து தேர்தல் உடனடியாக நடத்தினால் ஆளுங்கட்சிக்கு வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும் என்று நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கூறுகிறார்.
இதன்போது தேர்தலை சந்திக்கலாம் என்று கொள்கையளவில் இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டதாகவும் கிழக்கு மாகாண முதலைமைச்சர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சந்திரகாந்தன், மத்திய அரசின் துணையமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் சில கிழக்கு மாகாண தலைவர்களும் கலந்துகொண்ட இந்தக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நடந்துள்ளது.இப்போது இருக்கும் அரசியல் களச்சூழ்நிலையில் தற்போது தேர்தலை நடத்தினால் பெருவாரியான வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் தேர்தல் நடத்தும் யோசனைக்கு ஆதரவு தெரிவித்ததாக சந்திரகாந்தன் கூறினார். கிழக்கு மாகாண சபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் தான் முடிவடைகின்ற நிலையில், அப்போதே தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று முன்னதாக கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தேர்தல் நடத்தப்பட வேண்டிய தேவைக்காக அந்த தீர்மானத்தை மீண்டும் மாற்றியமைக்கும் அதிகார பலம் தம்மிடம் இருப்பதாகவும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கூறினார். கிழக்கு மாகாணத்தில் அடுத்த முதலைமைச்சராக வர வேண்டியவர் தமிழ் சமூகத்தை சேர்ந்தவரா அல்லது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரா என்பதை அவர்கள் பெறும் வாக்குபலம் தான் தீர்மானிக்கும் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’