வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 8 மே, 2012

இந்தியா, அமெரிக்கா விரித்த வலையில் இலங்கை சிக்கியுள்ளது: குணதாஸ



லங்கை அரசாங்கம் சீனாவுடனான நட்புறவிலிருந்து விலகி அமெரிக்காவுடன் நெருங்கிய நட்புறவை ஏற்படுத்திக் கொள்வதற்கான ராஜதந்திர காய் நகர்த்தல்களை முன்னெடுப்பதாக குற்றம் சாட்டும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், சரத் பொன்சேகாவை விடுவிக்கும் திட்டத்தை அமெரிக்கா முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாஸ அமரசேகர மேலும் தெரிவிக்கையில்,
இந்தியா, அமெரிக்கா விரித்த வலையில் அரசாங்கம் சிக்கிக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சூழ்நிலையில், இலங்கையிலிருந்தும் தூதுக் குழுவொன்று இந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொள்கிறது. இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சீன நட்புறவுக் கொள்கையிலிருந்து முழுமையாகப் பிரித்தெடுக்கும் படலம் முற்றுப்பெறவுள்ளது. ஏற்கனவே சீனாவுடனான நட்புறவிலிருந்து அரசாங்கம் மெதுமெதுவாக விலகி வருகிறது. இதன் பின்னர் நிச்சயமாக அமெரிக்காவின் இராணுவ முகாம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும். இதன் பின்னர் சரத் பொன்சேகா விடுதலைக்கான காய் நகர்த்தல்களை அமெரிக்கா மேற்கொள்வதோடு அதற்கான பாரிய அழுத்தம் ஜனாதிபதியின் மீது பிரயோகிக்கப்படும். சிங்களப் பௌத்தர் என்ற முத்திரையின் கீழ் சரத் பொன்சேகாவை விடுவித்து அதன் பின்னர் அவரை ஆட்சிக்குக் கொண்டு வந்து வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை ஒழிக்கும் செயற்பாடுகளை நிறைவேற்றி அதனை இனச் சம்ஹாரம் எனக் காரணம் காட்டி இலங்கையை அமெரிக்கா இரண்டாகப் பிரிக்கும். அச்சதித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களை இந்தியாவுடன் மேற்கொள்ளவே ஹிலாரி கிளின்டண் புதுடில்லி வந்துள்ளாரென்றும் டாக்டர் குணதாஸ அமரசேகர தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’