வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 15 மே, 2012

ஆ ராசாவுக்கு பிணை கிடைத்தது



ரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் கைது செய்யப்பட்டு தில்லியில் இருக்கும் திஹார் சிறையில் இருந்த இந்தியாவின் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவை இன்று, செவ்வாய்க்கிழமை, பிணையில் விடுதலை செய்ய , இந்திய நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டது.
கடந்த 15 மாதங்களாக இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் ராசா, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடைசியாக பிணையில் விடுதலை ஆகிறார். இந்த உத்தரவை, டில்லியில் இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.சைனி பிறப்பித்தார். ராசா ரூபாய் 20 லட்சம் பிணைதொகையுடன் கூடிய தனிநபர் ஜாமீன் செலுத்த வேண்டும், அதற்கு ஈடான இரு நபர் ஜாமீன் செலுத்த வேண்டும், நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி தமிழ்நாட்டிற்கு செல்லக்கூடாது,தொலைத்தொடர்புத் துறை அலுவலகத்துக்கு செல்லக்கூடாது, சாட்சிகளைக் கலைக்க முயலக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் அவருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறதுது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’