வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 15 மே, 2012

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் த.தே.கூ. பங்குபற்றுவதற்கான யோசனைத்தொகுதி அரசாங்கத்திடம் ஐ.தே.க. கையளிப்பு


ரசாங்கத்தால் நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்குபற்றக்கூடிய சாதகமான அரசியல் சூழலை உருவாக்க பொருத்தமான யோசனைகளின் தொகுதியொன்றை ஐக்கிய தேசிய கட்சி நேற்று அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் மற்றும் அரசியல் தீர்வு பற்றிய விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அக்கட்சியின் எம்.பி.க்கள் குழு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் சந்தித்தது. அரசியல் தீர்வொன்றை அடைவதற்கு 13+ இற்கு அப்பால் போகும்படி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, அரசாங்கத்துக்கு கூறியது என்று அக்கட்சியின் தகவல் வட்டாரங்கள் கூறின. இந்த ஆலோசனைகளில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்குவது பற்றி பேச வேண்டும் என்பதும் அடங்குகின்றது. இருபக்க பேச்சுவார்த்தைகளின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான ஐந்து ஆவணங்களின் அடிப்படையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் எட்டப்படும் எந்த தீர்வையும் தாம் எதிர்க்கப்போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சி, ஜனாதிபதிக்கு அறிவித்தது. இந்த சந்திப்பின் போது ஐக்கிய தேசிய கட்சியானது, தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது அவசியம் என ஜனாதிபதி மஹிந்த வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’