வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 25 மே, 2012

ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலின் ஆணையாளராக மீண்டும் நவநீதம்பிள்ளை



க்கிய நாடுகள் பொதுசபையின் ஏகோபித்த முடிவுக்கிணங்க ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளராக நவநீதம்பிள்ளை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மனித உரிமைகள் கவுன்ஸிலின் தலைவராக செய்யப்பட்ட நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் இவ்வாண்டு நிறைவடையவுள்ள நிலையில் அவரையே மீண்டும் பதவிவகிக்க தான் ஆமோதிப்பதாக ஐநா பொதுச் செயலாளர் பான்கி மூன் தெரிவித்திருந்தார். பான்கி மூனின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஐ.நா பொதுச்சபை நேற்றைய தினம் வாக்கெடுப்பின்றி நவநீதம்பிள்ளையை தொடர்ந்தும் அப்பதவியில் நீடிக்க ஏகமனதாக அனுமதி வழங்கியுள்ளது. 193 நாடுகளை அங்கத்துவமாகக் கொண்ட ஐநா பொதுசபையில் எவரும் நவநீதம்பிள்ளையின் பதவி நீடிப்புக்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. விரோதமான அணுகுமுறையில் நவநீதம்பிள்ளை செயற்படுவதாக குறிப்பிட்ட சிரியாவும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’