வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 1 மே, 2012

எந்த சமூகத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பள்ளிவாசல் விவகாரம் தீக்கப்படுமென ஜனாதிபதி உறுதி: ஹக்கீம்



ம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தான் பேசியதாகவும் இந்த பிரச்சினை அனைவருக்கும் நியாயம் கிடைககும் வகையில் தீர்த்துவைக்கப்படுமெனும் நம்பிக்கையுடன் தான் உள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று கூறினார்.
'தம்புள்ளை தகராறு கட்டுமீறிப் போவதை தான் அனுமதிக்கப்பபோவதில்லை எனவும் எந்தவொரு தனிநபரின் அல்லது சமுதாயத்தின் நலனுக்கும் பங்கம் ஏற்படாத வகையில் இந்த பிரச்சினையை தீர்க்கவுள்ளதாகவும் ஜனாதிபதி எனக்கு உறுதியளித்தார்' என அமைச்சர் கூறினார். இந்த பள்ளிவாசலை தம்புள்ளை புனித பிரதேசத்தினுள் வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு முஸ்லிம் அமைச்சர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர் என பிரதமர் தி.மு.ஜயரத்ன கூறியதை ஹக்கீம் நிராகரித்தார். பேரினவாத சக்திகளும் தீவிரவாதிகளும் இந்த தகராறை பயன்படுத்தி நாட்டில் அரசியல், சமூக, சமய காழ்ப்புணர்வை வளர்க்க அரசாங்கம் அனுமதிக்கக் கூடாதென அவர் கூறினார். அரசாங்கத்துக்கு பல சிறுபான்மை கட்சிகள் ஆதரவளிப்பதனால் உணர்ச்சியோடு தொடர்புபட்ட இந்த பிரச்சினையிலிருந்து அரசாங்கத்தினால் எவ்வித பாதிப்புமின்றி வெளிவர முடியும் என அமைச்சர் ஹக்கீம் கூறினார். சில தீவிரவாத சக்திகள் ஆர்ப்பாட்டம் செய்ய வழிவகுத்துக் கொடுத்த பொய்யான கட்டுக்கதைகளை பேரினவாத உணர்ச்சியுடன் கலந்து ஒலிபரப்பியதாக ஒரு எப்.எம்.வானொலி அலைவரிசையை அமைச்சர் பெயர் குறிப்பிட்டு கண்டித்தார். தம்புள்ளை பள்ளிவாசல் தொடர்பில் பிழையேதும் நடக்குமாயின், இலங்கையுடன் இதுவரையில் நட்புறவை பேணியதுடன் இலங்கைக்கு எதிரான ஐ.நா.தீர்மானத்தை மனித உரிமை மன்றத்தில் எதிர்த்த உலக முஸ்லிம் சமுதாயம், இலங்கையை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கும் ஆபத்தும் உள்ளது என அவர் கூறினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் சகல முஸ்லிம்களும் இந்த பள்ளிவசாலை வேறு இடத்துக்கு கொண்டு செல்லும் முயற்சிகளை எவ்வித தயக்கமுமின்றி எதிர்க்கின்றனர். இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை. பள்ளிவாசலை இடமாற்றவென எவரும் நிதி சேகரிக்கவோ அல்லது பிச்சை கேட்கவோ வேண்டியதில்லை. பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரம் என்பவற்றை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் ஒரு சிறு தீவிரவாத பிரிவினர் இலங்கையின் நற்பெயரை கொடுக்க முயற்சி செய்கின்றனர் என அமைச்சர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’