வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 30 மே, 2012

திட்டமொன்றின்படி இலங்கை செயற்படுகிறது: ரம்புக்வெல்ல



எல்.ரி.ரி.ஈ. முன்னாள் போராளிகள் தொடர்பாக விரைவான நீதித்துறை செயற்பாடுகள் தேவை என அமெரிக்கா கூறியுள்ளமை குறித்து ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கம் இவ்விவகாரம் தொடர்பாக செயற்திட்டமொன்றை கொண்டுள்ளதாகவும் அதன்படி செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.
விரைவாக விடுதலை செய்ய வேண்டுமென இத்தரப்பினரின் கோரிக்கையை அமுல்படுத்துவதானால், ஸ்தாபிக்கப்பட்ட முறைமையொன்றிலிருந்து விலகி மற்றொரு ஒழுங்கில்லாத முறையொன்றை பின்பற்ற வேண்டியிருக்கும் என அமைச்சர் ரம்புக்வெல்ல கூறினார். 'செயற்திட்டமொன்றை கொண்டிருப்பது குறித்த கேள்விக்கு இடமில்லை. ஏனெனில் அப்படி இல்லையெனில் ஆயிரக்கணக்கானோர் விடுதலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். பேசப்படும் இந்நபர்கள் கைது செய்யப்பட்ட அல்லது அரசாங்கத்திடம் சரணடைந்த தீவிரமான பயங்கரவாதிகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். னஎவே அவர்களுகு;கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே சில தரப்பினர் இச்செயன்முறையை விரைவுபடுத்தக் கோருகிறார்கள் என்றால் அவர்கள் நீதித்துறை செயற்பாடுகளை மௌனமாக்குமாறு கோருவதைப் போன்றே உள்ளது' என அவர் கூறினார். எல்.ரி.ரி.ஈ. முன்னாள் உறுப்பினர்கள் தொடர்பாக ஆயிரக்கணக்கான வழக்குகள் உள்ளதகாவும் இவ்வழக்குகளை சட்டமா அதிபர் திணைக்களம் தனித்தனியாக கையாள வேண்டியிருப்பதாகவும் அமைச்சர் ரம்புக்வெ;ல கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’