வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 18 மே, 2012

பொன்சேகாவுக்கு ஒரு வழக்கில் பிணை அனுமதி; வெள்ளைக்கொடி வழக்கினால் தொடர்ந்தும் சிறையில்



மு ன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதியளித்துள்ளது.
2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, இராணுவத்திலிருந்து தப்பி சென்ற வீரர்களை தங்கவைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சரத் பொன்சேகாவிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து ஒரு மில்லியன் ரூபா ரொக்கப் பிணையிலும் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையிலும் அவரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. அத்துடன், பொன்சேகாவின் கடவுச்சீட்டினைப் பறிமுதல் செய்யவும் தேவைப்படுமிடத்து அதனை மீளவும் பெற்றுக்கொள்ளுடாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நவலோகா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சரத் பொன்சேகா, இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது உடல்நிலை இன்னமும் சரியாகவில்லை என்று அவர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். சட்டத்தரணிகளின் தகவலை செவிமடுத்த நீதிபதி, சரத் பொன்சேகாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதால் அதற்கான பத்திரங்களில் அவர் கையொப்பமிட வேண்டியுள்ளதாகவும் அதற்காக வைத்தியசாலைக்குச் சென்று உரிய ஆவணங்களில் கையெழுத்து பெற்றுவருமாறு நீதிமன்ற லிகிதருக்கு உத்தரவிட்டார். எனினும் வெள்ளைக்கொடி வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகா தொடர்ந்தும் சிறையில் உள்ளார். இவ்வழக்கு தீர்ப்புக்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Views: 438

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’